×

ஊசி இல்லாமல் 3 டோஸ் போடலாம் ஜைடஸ் கேடில்லா நிறுவன தடுப்பு மருந்துக்கு அனுமதி: 12-17 வயதினருக்கும் செலுத்தலாம்

புதுடெல்லி: உள்நாட்டைச் சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம் உருவாக்கிய, ஊசியில்லாத 3 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகாலத்தில் பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அவசர பயன்பாட்டு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 6வதாக ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கும்படி ஒன்றிய அரசின் நிபுணர்கள் குழு நேற்று பரிந்துரை செய்தது. இதற்காக, ஜைடஸ் கேடில்லா நிறுவனம் கடந்த ஜூலை 1ம் தேதி விண்ணப்பித்தது. நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் (டிசிஜிஐ) இந்த தடுப்பு மருந்துக்கு நேற்றிரவு அனுமதி அளித்தது. இதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் 2வது தடுப்பு மருந்து என்ற பெருமையையும், முதல் டிஎன்ஐ வகை தடுப்பூசி என்ற பெருமையையும் கேடில்லா நிறுவனம் பெறும். இந்த தடுப்பு மருந்தை 12-17 வயதினருக்கும் செலுத்தலாம். ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களை கொண்டது. முதல் டோஸ் எடுத்துக் கொண்டபின் 28வது நாளில் 2வது டோசும், 56வது நாளில் 3வது டோசும் செலுத்த வேண்டும்.

இது ஊசியில்லா தடுப்பு மருந்தாகும். அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இ்நத மருந்து செலுத்தப்படும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிஎன்ஏ வகை தடுப்பு மருந்து சிறந்த முறையில் கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கேடில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களிடம் பரிசோதிக்க விண்ணப்பம்அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் 12 – 17 வயது சிறுவர்களிடம் தனது தடுப்பூசியை பரிசோதிக்க ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஒற்றை டோஸ் கொண்ட இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே இந்தியாவில் அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The post ஊசி இல்லாமல் 3 டோஸ் போடலாம் ஜைடஸ் கேடில்லா நிறுவன தடுப்பு மருந்துக்கு அனுமதி: 12-17 வயதினருக்கும் செலுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Zydus Catilla ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி